நடிகை நமீதா தனது நண்பர் வீராவை நவம்பர் 24ஆம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்.

namitha

மச்சான் மச்சான் என்ற செல்லமான அழைப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நமீதா. 2004ஆம் ஆண்டு வெளிவந்த ‘எங்கள் அண்ணா’ என்ற படத்தில் நடத்து தமிழுக்கு அறிமுகமானார் நமீதா.

சில ஆண்டுகளாக அவரது மார்க்கெட் கவிழ்ந்துவிட்டதால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்தார்.

namitha

இந்நிலையில், அவருக்கு கல்யாணம் நடக்கப்போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இதைக் கேட்ட நமீ ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துபோய்விட்டனர். பிக்பாஸில் பங்கேற்ற மற்றொரு நடிகை ரைசா இத்தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வதந்தி:

நமீதாக்கும் மூத்த நடிகரான சரத்பாபுவிற்கும் திருமணம் எனும் வதந்தி சில நாட்களுக்கு முன்பு அதிகமாகப் பரவியது. சரத்பாபுவும், நடிகை நமீதாவும் கடந்த சில வருடங்களாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் ஒன்றாக வாழ்வதாகவும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

namitha

வதந்தி குறித்து நடிகர் சரத்பாபு, ‘நான் அவருடன் படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்த வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இது முழுப் பொய்’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில், நமீதாவின் திருமண அறிவிப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நடிகர் வீராவுடன் காதல் மலர்ந்தது எப்படி என நமீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நானும் வீராவும் நவம்பர் 24 அன்று திருப்பதியில் திருமணம் செய்யவிருப்பதை அனைவரும் இந்நேரம் அறிந்திருப்பீர்கள். வீரா என்னுடைய சிறந்த நண்பர்.

ஒரு தயாரிப்பாளரும் வளரும் நடிகராகவும் உள்ளார். இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம்.

கடந்த வருட செப்டம்பர் மாதம் எங்களுடைய சிறந்த நண்பரான சஷிதர் பாபுவால் நாங்களும் இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டோம். சிறிது சிறிதாக நாங்கள் நண்பர்கள் ஆனோம்.

கடந்த செப்டம்பர் 6 அன்று கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்த வீரா, காதல் உணர்வுமிக்க கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டார்.

namitha

நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் உடனே சம்மதம் சொன்னதற்குக் காரணம், இருவருக்கும் ஒரே லட்சியம், ஒரே ஆன்மிக உணர்வு இருந்ததுதான்.

பயணம், விலங்குகள் மீதான அன்பு என இருவருக்கும் ஒரே ஆர்வங்கள். இருவரும் வாழ்க்கை மீது அதீத பிரியம் கொண்டவர்கள்.

என்னை முக்கிய நபராக எண்ணும் ஒருவருடன் இணையவுள்ளேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். கடந்த 3 மாதங்களில் நான் அவரை எந்தளவுக்குப் புரிந்துகொள்கிறேனோ அந்தளவுக்கு அதிர்ஷ்டம் கொண்டவளாக எண்ணிக்கொள்கிறேன்.

அவர் வெளிப்படுத்தும் அக்கறை, ஆதரவினால் ஆண்கள் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில் அனைவருடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.