Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆபாச மெசேஜ் அனுப்பிய ரசிகர்.. அவரை கிழித்து தொங்கபோட்ட நமீதா
நமீதா என்றால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? அர்ஜுனா அர்ஜுனா அம்புவிடும் அர்ஜுனா என மொத்த ரசிகர்கள் மனதிலும் அம்பை விட்டு தமிழ் சினிமாவையே தெறிக்கவிட்ட ஆறடி அழகி. ஹாய் மச்சான் என்று சொன்னால் அவ்வளவுதான் நம்ம தமிழ்நாட்டு பய புள்ளைக.
உருகி தண்ணியா போயிருவாங்க. அப்படிப்பட்ட நமீதா ஒரு கட்டத்திற்கு மேல் உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ரசிக்க படாத நாயகியாக ஓரம் கட்டப்பட்டார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நாயகியாக களம் இறங்க பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார். அதன் முயற்சியாக அவ்வப்போது சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.
அப்படிப்பட்ட நமீதாவை ரசிக்கத் தெரியாத ஒருவர், ஹாய் ஐட்டம் என கொச்சையாக மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனை கண்டு கொதித்தெழுந்த நமீதா ஒரு வாங்கு வாங்கி விட்டார் அந்த நபரை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நபருடைய முழு விவரத்தையும் போட்டு கண்டபடி கிழித்து எறிந்து விட்டார்.
மேலும் தன்னுடைய அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து உங்களுக்கு தவறான மெசேஜ் அனுப்பி விட்டார்கள் என கூறினாராம் அந்த ரசிகர். அதற்கு மனம் உடைந்த நமீதா, கவர்ச்சியாக நடித்ததால் இந்த மாதிரி பேசுகிறார்களா என தெரியவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார்.

namitha-fan-bad-comment
Don’t வொரி டா செல்லம்! நாங்க இருக்கோம்!
