fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆக்ரோஷமாகும் பிக்பாஸ் வீடு.. மன்னிப்பு கேட்டும் ஆவேசமான நமிதா வீடியோ.!

namitha-bigg-boss

Videos | வீடியோக்கள்

ஆக்ரோஷமாகும் பிக்பாஸ் வீடு.. மன்னிப்பு கேட்டும் ஆவேசமான நமிதா வீடியோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இந்த வாரம் கலகலப்பாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் நகர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த ஐந்து நாட்கள் கடந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பாத்ரூம்  ஏரியாவில் நமிதா மாரிமுத்து, தாமரைச்செல்வி இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெறுகிறது. இதில் நமீதா நாளைக்கு வீட்ல பெரிய சண்டை இருக்கு விடமாட்டேன் என ஆக்ரோஷமாக கூறுகிறார்.

பின்பு பெண்களுக்கான படுக்கை அறையிலும் இதைப் பற்றிய விவாதம் நடைபெறுகிறது. மறுநாள் தாமரைச்செல்வி இமான் அண்ணாச்சியிடம் தான் 40 இல்ல 400 குழந்தைகளை கூட வளர்ப்பீர்கள் என்று  நமீதாவிடம்  கூறியதாக சொல்கிறார்.

அதற்கு அண்ணாச்சி உங்க ஊர் பாஷையில் கூறியது தப்பா போயிடுச்சு என்று ஆறுதல் கூறி, நான் சமாதானப்படுத்தவா என்கிறார். அதற்கு தாமரைச்செல்வி நான் உடனே மன்னிப்பு கேட்டு விட்டேன் என்று கூறுகிறார்.

அப்போது அங்கு வரும் நமீதாவை இங்கே வா என்று அண்ணாச்சி கூப்பிட, தப்பா எடுத்துக்காதீங்க நான் வரலை என்று  நமீதா கோபமாக வெளியேறுகிறார். இவ்வாறு ப்ரோமோ காட்சி முடிவடைகிறது.

ப்ரோமோ பார்த்துட்டு எபிசோட் பாத்தா ஒண்ணுமே வரலையே என்று கூறும் ரசிகர்கள் நமீதாவுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும் என்றும் கருத்துக்களை கூறுகின்றனர்.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top