புத்தாண்டை முன்னிட்டு பலரும் சொகுசு பார்ட்டிகளுக்கு செல்லும் வேலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசில் பார்ட்டி தொடங்கினார். அவரது ரசிகர்களின் பல வருட கனவை நிறைவேற்றும் விதமாக தன் அரசியல் திட்டம் பற்றி நேற்று அறிவித்தார்.

Rajnikanth

பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலரோ ஏன் இவருக்கு இந்த வீணான வேலை என்று எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

rajini

இந்நிலையில் முன்னாள் இலங்கை அதிபரான மஹிந்தா ராஜபக்ஷேவின் மகன் நம்மெல் ராஜபக்ஷே ரஜினிகாந்தின் அரசியல் பிரிவேசம் குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  சாந்தனு பாக்யராஜ் மெர்சல் படத்தை எங்கு பார்க்கப்போகிறார். தெரியுமா ?

“என் தந்தைக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த அரசியலில் நுழைந்துள்ளார் . சிறப்பான செய்தி. அவரின் நிஜ வாழ்க்கை சினிமாவை போல் ஆகாமல் இருக்கவேண்டும். சிவாஜி படத்தில் மக்களுக்கு நல்லது செய்து கைது ஆவார் அதே போல் அவரின் அரசியல் வாழ்க்கை ஆகிவிட கூடாது . அரசியலுக்குள் உங்களை வரவேற்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழ் ஈழம், தமிழக மீனவர்கள் பிரச்சனை என இரு நாட்டுக்கும் இடையே பதட்டம் இருக்கும் சூழலில் , இந்த ட்வீட் ரஜினி ரசிகர்களை சீண்டி பார்க்கும் விதமாகவே உள்ளது.