சல்மான் கான் முகத்தில் வெண்ணீரை கொட்டிய நக்மா – காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவிங்க

இந்தியாவில் தாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சேர்ந்தவர் சல்மான் கான்(32), இவரின் மனைவி நக்மா கான் (25).

இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த நாளிலிருந்தே இந்தி நடிகர் சல்மான் கான் போல தனது கணவரை ஸ்டைலாக இருக்க நக்மா கூறியுள்ளார்.

மேலும் கணவரின் தாடியையும் நக்மா எடுக்க சொன்னார்.

ஆனால் இஸ்லாமிய மத நம்பிக்கையை அதிகம் பின்பற்றிய சல்மான் கான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நேற்றும் இதுகுறித்து நக்மா தனது கணவரிடம் பேச வாக்குவாதம் முற்றியது.

இதில் கோபமான நக்மா, அடுப்பில் இருந்த வெந்நீரை தூக்கி வந்து சல்மானின் முகத்தில் ஊற்றினார்.

இதையடுத்து வலியால் துடித்த சல்மானை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சல்மானின் முகம் 20 சதவீதம் வெந்து போயுள்ள நிலையில், பொலிசார் நக்மா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Comments

comments