நகுல்

பிரபல நடிகை தேவயானியின் தம்பி நகுல். இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் ஐந்து கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் நகுல் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘வல்லினம்’, ஆகிய வெற்றிபடங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

devayani nakul

‘பிரம்மா. காம் ’ படத்திற்கு பிறகு நடிகர் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செய்’.

செய்

ரொமான்டிக் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதனை ராஜ் பாபு என்பவர் இயக்கியுள்ளார். ஆஞ்சல் முஞ்சல் தான் ஹீரோயின் . இப்படத்தில் நாசர், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு, கோபி கிருஷ்ணா எடிட்டர். ணிஸ் லோபஸ் இசை.