Connect with us

Videos | வீடியோக்கள்

படு மொக்கை போடும் வடிவேலு.. பழைய படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரெய்லர்

ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்வத்துடன் இருந்தார்களோ அதை இந்த ட்ரெய்லர் பூர்த்தி செய்யவில்லை.

vadiveli-naai-sekar-returns

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். பல மாதங்களாக எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் இப்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது.

அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து வந்த இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்வத்துடன் இருந்தார்களோ அதை இந்த ட்ரெய்லர் பூர்த்தி செய்யவில்லை. வடிவேலுவின் காமெடி அலப்பறையை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

Also read: மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை.. எத்தனை ரெட்கார்டு போட்டாலும் திருந்தாத வடிவேலு

தலைநகரம் திரைப்படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் காமெடி இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ட்ரெய்லரில் இருக்கும் காமெடி டயலாக் மற்றும் காட்சிகள் ஏற்கனவே பழைய வடிவேலு காமெடியை பட்டி டிங்கரிங் பார்த்தது போல் இருக்கிறது.

அந்த வகையில் இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே ஏஞ்சலினாவை யாரோ கடத்திட்டாங்க என்ற அலப்பறையுடன் ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து வடிவேலுவின் என்ட்ரி காட்டப்படுகிறது. நாய்களை கடத்தும் திருடனாக வடிவேலு இதில் நடித்து இருக்கிறார்.

Also read: உன்னால முடிஞ்சத பாத்துக்கோ என மதிக்காமல் பேசிய வடிவேலு.. சைலண்டா ஆப்பு வச்சு விட்ட இயக்குனர்

அவருடைய உடல் மொழியும், காமெடியும் பல திரைப்படங்களில் நாம் பார்த்து விட்டதால் இது பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை. அதிலும் தம்பி இன்னும் ஜூஸ் வரல என்ற டயலாக்குகள் படு மொக்கையாக இருக்கிறது. மொத்த ட்ரெய்லர் காட்சிகளும் ரொம்பவும் செயற்கையாக இருப்பதால் இது ரசிகர்களை கவரவில்லை.

மேலும் பிக்பாஸ் புகழ் ஷிவானி இப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு கவர்ச்சியை தவிர பெரிய அளவில் வாய்ப்புகள் இருக்காது என்று தெரிகிறது. அந்த வகையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் வெளியாகி எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: பெரும் முதலாளிகளை கதறவிடும் வடிவேலு.. எங்க பேனர்ல நடிக்க வேண்டாம் என கையெடுத்துக் கும்பிட்ட நிறுவனம்

Continue Reading
To Top