நாகினி நாயகி மருத்துவமனையில் அனுமதி!

ஹிந்தி மொழியில் உருவான சீரியல் நாகினி இதனை சன் தொலைக்காட்சி தமிழில் டப் செய்து ஓளிப்பரப்பியது. இது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் மௌனி ராய், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன்,மணிஷ் கண்ணா,கமலிகா குஹா தகுர்தா,பூஜா ஷர்மா,கருணா வெர்மா,மசேர் சயேத்,ஷரிகா ரெய்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

தற்போது இந்த தொடரின் 2ம் பாகம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், 3ம் பாகம் தயாராக உள்ளது. இதில் வேறொரு ஹீரோயின் நடிக்க உள்ளார். 2வது பாகத்தில் நடித்த அதா கானுக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருகிலுள்ள மருத்துவனைக்கு அவரை அழைத்து சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரைப்பை குடல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக ஓய்வில் இருக்க வேண்டுமென என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதால் அம்மணி வீட்டில் ஒய்வு எடுத்து வருகிறார்.

Comments

comments

More Cinema News: