தமிழில் டப் செய்யப்பட்ட சீரியல்களில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சீரியல் நாகினி. இதில் மௌனி ராய், அர்ஜுன் பிஜ்லானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த சீரியலில் நடிக்கும் அம்ரிதா என்கிற சரியா ரெய்னாவிற்கு சமீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர் கும்கும் பாக்யா என்ற சீரியலில் நடிக்கும் ஷபீர் என்பவரின் அண்ணன்.

இவர்களது திருமணம் கேதலிக் மற்றும் காஷ்மிரி முறைப்படி நடந்துள்ளது. தற்போது இவர்களின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.