சீரியல் நடிகையான மௌனி ராயை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிரபல நாடகத்தொடரான நாகினியில் நடித்து பிரபலமானவர். மிகவும் பிசியாக இருக்கும் இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார் நடிக்கும் கோல்ட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தற்போது இதன் படப்பிடிப்புகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தை நாகினி மௌனி ராய் மகிழ்ச்சியுடன்ந டனம் ஆடும் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் The Worst Jet Leg என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் அவருக்கு 25 நாட்கள் கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ளதாம். போட்டோவில் இருப்பது அப்படத்திற்காக நடன பயிற்சி எடுத்தது தானாம். அவருக்கு பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.