Tamil Cinema News | சினிமா செய்திகள்
தற்கொலை செய்ய நினைத்த நாகினி நடிகை… காரணம் இதுதானாம்
இளசுகளிடம் ட்ரெண்ட் அடித்த நாகினி சீரியலின் நாயகி அடா கானின் தற்கொலை எண்ணத்திற்கு அவர் நண்பர் தான் காரணம் எனத் தெரிவித்து இருக்கிறார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது நாகினி சீரியல். எப்போதும் சீரியல் என்றால் அம்மாக்கள் கூட்டம் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், நாகினிக்கு மட்டும் வாண்டு முதல் இளசு வரை ரசிகர்களாக இருந்தனர். தமிழில் இந்த சீரியல் டப் செய்து ஒளிபரப்பப்பட்டது. ஒரே சீசனுக்கே அமோக ஆதரவு கிடைத்தது. இதில் ஷிவன்யாவாக மௌனி ராயும், ஸ்ரேயாவாக அடா கானும் நடித்தனர். ஏக்தா கபூர் இந்த நாகினி சீசன்களை தயாரித்து வந்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பபட்டு வருகிறது.
நாயகியான மௌனி ராயிற்கு ஒரு பக்கம் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அதைபோல, முதல் சீசனில் இரண்டாவது நாயகியாகவும், இரண்டாவது சீசனில் வில்லியாகவும் நடித்தவர் அடா கான். கருப்பு பாம்பாக நடித்தவருக்கு ஒரு ரசிகர் கூட்டமே உருவாகியது. அடா கான் எப்போதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதிலும் கில்லாடி என்பது அவர் ரசிகர்களுக்கு தெரியும்.
இந்நிலையில், சமீபகாலமாக அடாகானின் சமூக வலைத்தள பதிவுகள் அவர் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. காரணம், எல்லா பதிவுமே தற்கொலையில் எண்ணத்தில் இருந்தது. இதுகுறித்து, ஒரு விவாத நிகழ்ச்சியில் மனம் திறந்து இருக்கிறார் அடா கான். அப்போது, அவர் என் தற்கொலை எண்ணத்திற்கு காரணம் நண்பர் அங்கித் கீரா எனத் தெரிவித்து இருக்கிறார். தன்னை அங்கித் மூன்று முறை ஏமாற்றிவிட்டதாக கூறி அழுது இருக்கிறார். இத்தகவல் இணையத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
