Tamil Nadu | தமிழ் நாடு
80 ஆபாச வீடியோக்கள், காசி வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! அதிர்ச்சியான நாகர்கோவில் மக்கள்
பல இளம் பெண்களை ஆசை காட்டி காதல் வலையில் சிக்கவைத்து, அவர்களை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது.
சென்னையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர், இவரால் பாதிக்கப்பட்டு சுமார் 7 லட்சம் வரை இவரிடம் இழந்ததாகவும், மேலும் அவருடைய மோசமான படங்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும், இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசாரிடம் ஆன்லைனில் மூலம் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து வரிசையாக பல விபரங்கள் காசியைப் பற்றி வெளிவர தொடங்கியது. ஆன்லைனில் இளம் பெண்களுடன் பழகி காதலிப்பது போன்று நடித்து அவர்களுக்குத் தெரியாமலேயே ஆபாச படங்களை எடுத்து மிரட்டியும், ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
அதன் பின் கன்னியாகுமரி ஆட்சியர் கொடுத்த உத்தரவின் பேரில் காசியை குண்டர் சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் மொபைல்களில் இருந்து கிட்டத்தட்ட 80 ஆபாச வீடியோக்கள் இருக்கும் அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தது.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு காசியின் நண்பன் தினேஷ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
தற்போது தினேஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தினேஷுக்கு எதிராக எந்த ஆவணம் இல்லாததால் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
பல இளம் பெண்களை நாசம் செய்த காசியின் நண்பன் தினேஷுக்கு ஜாமின் கிடைத்திருப்பது வழக்கின் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.
மேலும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிக்கு எதிராக ஆவணங்களை விரைவில் தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
