fbpx
Connect with us

Cinemapettai

நாகர்கோவில் காசி வழக்கில் அவனைப் பெற்ற தந்தையும் கைது.. கூட்டு சேர்ந்து செய்ததாக அதிரடி நடவடிக்கை

Tamil Nadu | தமிழ் நாடு

நாகர்கோவில் காசி வழக்கில் அவனைப் பெற்ற தந்தையும் கைது.. கூட்டு சேர்ந்து செய்ததாக அதிரடி நடவடிக்கை

நாகர்கோயில் காசியின் வழக்கில் அவரது தந்தையை போலீசார் கைது செய்துள்ளதால் இன்னும் சூடுபிடித்து உள்ளது. 26 வயதுள்ள காசி, பல பெண்களை வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்ததாகவும், நிர்வாண போட்டோக்களை எடுத்து லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி உள்ளதாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போஸ்கோ, நில ஆக்கிரமிப்பு என கிட்டத்தட்ட 6-க்கு மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல பெண்களை தனது வலையில் விழவைத்து, சீரழித்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்தநிலையில் போலீஸின் விசாரணை தீவிரம் அடைய பலரின் எதிர்பார்ப்பு படி வழக்கு சிபிசிஐடிக்கு கைமாறியது. அனைத்து தடயங்களையும் சிபிசிஐடிக்கு ஒப்படைத்துள்ளனர்.

இதனை வைத்து விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, காசியின் தந்தை ஒரு சில தடயங்களை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை பொறுத்தவரை ஆதாரம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.

அந்த வகையில் அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டால் காசியை காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இவர் செயல்பட்டுள்ளாராம். தற்போது காசியின் தந்தையும் குற்றவாளியாகக் கருதப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது பல பெண்களின்  ஆபாச வீடியோக்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனால் பல பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்படும் என்பதால் போலீசார் மிகவும் கவனமாக இந்த வழக்கை கையாண்டு வருகின்றனர். சாத்தான்குளத்தில் ஒரு தவறும் செய்யாமல் தந்தையும் மகனும் கொலை செய்த காவல்துறை ஒரு புறம், இந்த வழக்கில் மட்டும் தாமதிப்பது ஏன் என்று தெரியவில்லை?

இது போன்று ஒரு காசி மீண்டும் உருவாகி விடக்கூடாது என்பதற்காக அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

Continue Reading
To Top