fbpx
Connect with us

Cinemapettai

படிக்காததால் ஆத்திரம்.. 6ம் வகுப்பு மாணவனை இரும்பு வாளியால் தலையில் அடித்த டியூசன் டீச்சர்

Tamil Nadu | தமிழ் நாடு

படிக்காததால் ஆத்திரம்.. 6ம் வகுப்பு மாணவனை இரும்பு வாளியால் தலையில் அடித்த டியூசன் டீச்சர்

நாகர்கோவில் அருகே டியூசன் சென்ற 6ம் வகுப்பு மாணவனை இரும்பு டப்பாவால் தலையில் அடித்த டியூசன் டீச்சர் மீது வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மாஹின் அபுபக்கர். பெயிண்டிங் வேலை செய்துவரும் இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் 8-ம் வகுப்பும், இரண்டாவது மகன் பாரிஸ் முகம்மது 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இருவரும் பள்ளிவிளை பகுதியில் சரண்யா என்பவர் வீட்டில் டியூசனுக்கு செல்வது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை டியூசனுக்கு சென்ற பாரிஸ் முகம்மதுவை தலையில் ரத்தம் வழிந்த நிலையில் அவனது அண்ணன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதைக்கண்ட பெற்றோர் பதறியபடி விசாரித்துள்ளனர். ஒரு மாணவியின் நோட்டை எடுத்ததாக கூறி டியூசன் ஆசிரியை சரண்யா இரும்பு வாளியால் தாக்கியதில் பாரிஸ் முகமதுவின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மாஹின் அபுபக்கர் கொடுத்த புகாரின்பேரில் சரண்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சரண்யா மற்றும் தனது தாய் தந்தையுடன் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top