சென்னையில் பிறந்து தெலுங்கு சினிமாவை ஆட்டிப்படைக்கும் பிரபலம்.. அப்பா எட்டடினா, பதினாறு அடி பாயும் வாரிசுகள்!

இந்தியராய் பிறந்த அனைவருக்கும் எழுதப்படா விதயொன்று உள்ளது பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர் என. இப்படியான ஒரு பழிக்கு திரைத்துறை ஒன்றும் மாற்றல்ல தமிழ்நாட்டில் தூக்கி வைத்து கொண்டாடும் தலைவர் முதல் தல வரை மாற்று ஊர்களில் பிறந்தவர் பலர். தமிழ் நாட்டில் பிறந்து தெலுங்கு சினிமாவில் அசைக்க முடியா சக்தியாக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜூனா.

சென்னையில் பிறந்த நாகர்ஜுனா குடும்பம் விரைவிலேயே ஐதராபாத்திற்கு இடம் பெயர்ந்தது. பிரபல தெலுங்கு சினிா நடிகர் நாகேஷ்வர ராவ் வீட்டில் 5 வது பிள்ளையாக பிறந்த நாகர்ஜுனா செல்லம் தான். தனது பள்ளிப்படிப்பை ஐதராபாத்தில் முடித்த நாகர்ஜுனா முதலில் கல்லூரியில் சேர்ந்தது அண்ணா யூனிவர்சிட்டியில் தான்.சில காரணங்களுக்காக மெக்சிகோ அனுப்பப்பட்ட நாகர்ஜுனா படிப்பு முடித்து இந்தியாவும் வந்தாராம்.

1984-ல் நடிகர் வெங்கடேஷின் சகோதரி லட்சமி டகுபதியை திருமணம் செய்தார். சினிமாவின் மீதான நாட்டம் அதிகரிக்கவே நடிப்பு பயின்றார் நாகா பிறப்பிலேயே ஊறியதாயிற்றே அதி விரைவில் கற்றுக்கொண்ட நாகா 1986ல் விக்ரம் என்கிற படத்தில் அறிமுகமானார்.

அதற்கு முன்பே குழந்தை நட்சத்திலமாக ஜொலித்தாலும் நாயகனாக இதுவே நாகர்ஜுனாவின் அறிமுகம். பிறகு எத்தனையோ ஹிட்களை அள்ளித்தந்த நாகர்ஜுனா லட்சுமியோடு ஒரு குழந்தைக்கும் தந்தையானார் அந்த குழந்தை தான் இப்போது தெலுங்கு சினிமாவின் வளரும் நடிகர் “நாக சைதன்யா”.

1990 வரை லட்சுமியுடன் வாழ்ந்த அவர் பிறகு விவாகரத்து கோரினார். இரண்டாண்டுகளுக்கு பிறகு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இந்த கால இடைவெளியில் தமிழ் இந்தி சினிமா உலகில் அறியப்பட்ட நடிகராகவும் தெலுங்கு உலகில் ஒரு உச்ச நட்சத்திரமாகவும் இருந்தார்.

பிறகு அமலாவுடனான வாழ்வில் நடிகர் “அகில்” பிறந்தார். இதற்கு பிறகும் நடிகை தபு உடன் வாழ்வதாகவும் பார்ட்டி பப் என எங்கேயும் தபு எதிலும் தபு என இருந்தாலும் தபு பற்றிய கேள்விக்கு அவர் எனது நண்பர் என்பது மட்டுமே நாகர்ஜுனாவின் பதிலாக இருந்தது.

வாரிசு நடிகர்கள் காணாமல் போகும் இந்த காலத்தில் நாக சைதன்யா மற்றும் அகில் இருவரும் அப்பாவின் பெயரை காப்பாற்றுவது போன்ற சில ஹிட் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இமயமளவு வளர்ந்துள்ள நாகர்ஜுனா தமன்னா கார்த்தி நடிப்பில்”தோழா” என்கிற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரையில் வந்தார். இப்போது தெலுங்கு சினிமாவில் கதை தேர்வு செய்து நடித்தும் வருகிறார்.

nagarjuna akhil
nagarjuna akhil
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்