fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பொறுமையை இழந்த நாகசைதன்யா, சமந்தா ஜோடி.. சீக்கிரமா அம்மா ஆக போறாங்களாம்!

samantha-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொறுமையை இழந்த நாகசைதன்யா, சமந்தா ஜோடி.. சீக்கிரமா அம்மா ஆக போறாங்களாம்!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நாகசைதன்யா- சமந்தா ஜோடி. இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர்  7 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். குறிப்பாக ஃபேரி டேல் வெட்டிங் போல நடந்த இவர்களது திருமணம் பல மாதங்களாக பேசப்பட்டது.

அதேபோல், திருமணமான ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் பொதுவான ஒரே கேள்வியை சமந்தாவிடமும், நாகசைதன்யாவிடமும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆம், எப்போ உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற கேள்விதான் அது.

இந்தக் கேள்விக்கு நாக சைதன்யாவும், சமந்தாவும் பொறுமையாக பதில் அளித்து வருகின்றனர். அந்தவகையில் இந்தக் கேள்விக்கு நாகசைதன்யா  ‘விரைவில் நடக்கும்’ என்று பதிலளித்திருந்தார்.

ஆனால் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் இந்த கேள்வியை கேட்ட போது, வித்தியாசமான முறையில் பதிலளித்திருக்கிறார் சமந்தா. அதாவது ‘எப்போது உங்கள் குழந்தை வரும்?’ என்று ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு சமந்தா, ‘என்னுடைய உடல் செயல்பாடுகளின் மீது அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. நான் 2022 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதி 7 மணிக்கு குழந்தை பெற போகிறேன்’ என்று பதில் அளித்துள்ளாராம்.

samantha-naga-chaithanya-couple

samantha-naga-chaithanya-couple

மேலும் சமந்தாவின் இந்த சர்க்கஸ்டிக்கான பதில், இந்த கேள்வி கேட்போர் அனைவரையும் வாயடைத்துப் போகச் செய்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top