புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நயனை தொடர்ந்து, கல்யாண கேசட் விற்க அட்வான்ஸ் வாங்கிய நாக சைதன்யா.. அம்மாடியோவ்! இத்தனை கோடியா?

Nayanthara: கல்யாண கேசட் என்ற வார்த்தை பல வருடங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்தது. இதை மீண்டும் வைரல் ஆக்கியது நயன்தாரா தான். தன்னுடைய டாக்குமெண்டரி படத்தை பெரிய கனவாக நயன்தாரா இரண்டு வருடங்களாக உருவாக்கினார்.

ஆனால் அவர் விட்ட 3 அறிக்கையில் அந்த டாக்குமென்டரிக்கு கல்யாண கேசட் என்று பெயர் வைத்து விட்டார்கள். தற்போது அடுத்த கல்யாண கேசட் லிஸ்டில் இணைந்திருக்கிறார் நாக சைதன்யா. நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் நாகார்ஜுனாவின் மூத்த மகனுமான நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவுக்கும் டிசம்பர் முதல் வாரத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.

அம்மாடியோவ்! இத்தனை கோடியா?

இந்த நிலையில் இவருடைய திருமண வீடியோ Netflix OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வீடியோவிற்கு 50 கோடி விலை பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இந்த ஜோடி திருமணம் செய்ய இருக்கிறார்கள்.

நயன்தாராவின் திருமண வீடியோ 25 கோடிக்கு விற்கப்பட்டது என்ற நிலையில் இந்த ஜோடியின் வீடியோ 50 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. இவர்கள் இருவரும் தங்கள் காதலித்த கதை எல்லாம் இதில் சொல்வார்கள் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவுடன் ஆன திருமண வாழ்க்கை, சோபிதா உடனான காதல் தொடங்கிய இடத்தை பற்றி நாக சைதன்யா வெளிப்படையாக பேசுகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News