என்ன ஏன் கிரிமினல் மாதிரி பாக்குறீங்க, என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?. சமந்தா ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுத்த நாக சைதன்யா

Sam Naga
Sam Naga

Naga Chaitanya: நடிகர் நாக சைதன்யா தன்னுடைய விவாகரத்து குறித்த முழு உண்மையை சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

சமீபத்தில் இணையவாசிகள் இடையே அதிக வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஜோடி நாக சைதன்யா சோபிதா.

இதற்கு காரணம் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் இடையே இருந்த அழகான உறவு தான்.

சமந்தாவை ஏமாற்றிவிட்டு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கிறது.

என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?

இதில் அதிகமாக அடி வாங்குவது சோபிதா தான். அதிலும் சமந்தாவுக்கு அரிய வகை நோய் ஏற்பட்ட போதும், அதை தொடர்ந்து அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது சோர்வாக இருப்பதும் அவர் மீதான சிம்பதியை அதிகரித்து விட்டது.

தற்போது இந்த விஷயம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் நாக சைதன்யா. எல்லோருடைய வாழ்க்கையிலும் இது மாதிரி நடக்குது.

என்ன மட்டும் ஏன் கிரிமினல் மாதிரி பாக்குறீங்க. ஒரு உறவை விட்டு பிரிவதற்கு முன் நான் ஆயிரம் தடவைக்கு மேல் யோசித்து தான் முடிவு எடுப்பேன்.

நான் ஏற்கனவே ஒரு உடைந்த குடும்பத்திலிருந்து வளர்ந்து வந்தவன். அதனால் எந்த ஒரு உறவையும் முறிக்க வேண்டும் என நான் நினைக்க மாட்டேன்.

எங்களுக்குள் நடந்த விவாகரத்து நாங்கள் இருவரும் பேசி பரஸ்பரமாக எடுத்த முடிவு என்று சொல்லி இருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner