Tamil Cinema News | சினிமா செய்திகள்
சமந்தா பெயர் இல்லாமல் வேறு ஒன்றை கையில் டாட்டூ போட்டு இருக்கும் நாக சைதன்யா
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் நாக சைதன்யாவின் கையில் இருக்கும் டாட்டூ தான் தற்போதையை இணையத்தின் ஹாட் வைரலாக பரவி வருகிறது.
டோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யா. அப்பாவை போல பல படங்களில் நடித்தவருக்கு இன்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை விட நடிகை சமந்தாவுடனான இவர் காதல் திருமணத்துக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம். தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரின் துள்ளலான நடிப்பும், குழந்தைத்தனமான பாவனைகளும் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு இடத்தை பெற்று தந்தது. அதே ஜோருடன் தெலுங்கில் கால் பதித்தவருக்கும் வெற்றியே கிடைத்தது. நாக சைதன்யாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயின் தெலுங்கு பதிப்பான “ஏ மாய சேசாவே…”படத்தில் முதல்முறையாக நடித்தார். இருவரும் மீண்டும் இணைந்து நடித்த ஆட்டோநகர் சூர்யா படத்தில் நடித்தனர். இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று இந்த ஜோடிக்கு செம அப்ளாஸை தந்தது. ஆனால் இருவரும் காதலில் எல்லாம் விழவில்லை.
கடந்த 2015ம் ஆண்டு இருவரும் பொது இடங்களில் ஒன்றாக நடைப்போட்டது. ஊடகங்களுக்கு தீனியாக அமைந்தது. ஒரு வேளை தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை சமந்தா, தெலுங்கு உலகின் மருமகளாக போகிறாரோ என கிசுகிசுக்கள் தொடங்கியது. மற்ற நட்சத்திர தம்பதிகள் போல இவர்களும் அதெல்லாம் இல்லப்பா நாங்க நண்பர்கள் தான் என மறைத்தனர். ஆனால், கிசுகிசுக்கள் நின்றப்பாடு இல்லை. இதை தொடர்ந்தே, இருவரும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் தங்கள் நெருக்கமான புகைப்படங்களை போட்டு காதலை உறுதிப்படுத்தினார். இதை தொடர்ந்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இருமுறை இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்துக்கொண்ட தம்பதிகள் தற்போது பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக சைதன்யாவின் கையில் ஒரு டாட்டூ பச்சை குத்தப்பட்டு இருந்தது. அது எதோ கோட் போல இருந்ததால், ரசிகர்களுக்கு அதை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்தது. இதை தொடர்ந்து, நாக சைதன்யாவின் ரசிகர் ஒருவர் நாக சைதன்யாவின் கையில் இருப்பது மோஸ் கோட் தான். அதுவும் சமந்தா – நாக சைதன்யாவின் கல்யாண நாள் தான். சமந்தா, நாக சைதன்யா தவறாக இருந்தால் திருத்துங்கள் என ட்வீட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்த சமந்தா, அவர் டாட்டூவை பற்றி தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்களா என கேட்டு இருக்கிறார். தாயே பதில சொல்லு மா!
