Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மோசமான விபத்தில் சிக்கிய நாடோடிகள் நடிகர்

காலில் ப்ளேட் வைத்த பிறகு நலமுடன் இருப்பதாக நடிகர் விஜய் வசந்த் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடிகராக சில படங்களில் நடித்து இருப்பவர் விஜய் வசந்த். இவர் புகழ்பெற்ற வணிக நிறுவனமான வசந்த் அண்ட் கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் ஆவார். 2007 ஆம் ஆண்டில் சென்னை 600028 எனும் திரைப்படத்தில் நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். அதே ஆண்டில் தோழா எனும் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ச்சியாக அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. நாடோடிகள், நண்பன், சென்னை 600028 இரண்டாம் பாகம், வேலைக்காரன் உள்ளிட்ட சில படங்கள் இவர் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

தற்போது விஜய் வசந்த் மை டியர் லீசா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் லீசா, மயில்சாமி, சாமிநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ரஞ்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது. அதில் சில நாட்களாக சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. ரவுடிகளுடன் மோதும் ஒரு காட்சியில் விஜய் வசந்தின் கால் தவறி பள்ளத்தில் சிக்கினார். இதனால் அவரால் எழுந்து கொள்ள முடியாமல் வலியில் தவித்து இருக்கிறார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். விஜயை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், கண்டிப்பான ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். இதை தொடர்ந்து, விஜய் வசந்த் ஓய்விற்காக சென்னை திரும்பினார். இந்த விபத்து கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விஜய்வசந்த் தன் நிலைமை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து, அதில் அவர் பதிவிட்டு இருக்கும் பதிவில், ப்ளேட் மற்றும் ஸ்க்ரூவை வைத்த பிறகு நலமுடன் நான் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் விபத்து பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த பதிவு பலருக்கு ஆறுதலாய் அமைந்து இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top