சூப்பரான ஜோடியாக மாறியிருக்கும் சசிகுமார் அஞ்சலி.. நாடோடிகள் 2

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார், பரணி, அஞ்சலி, அதுல்யா, ஞானசம்பந்தம்,எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் நாடோடிகள் 2.

நாடோடிகள் முதல் பாகம் 10 வருடங்களுக்கு முன்பு சிறப்பான வரவேற்பை பெற்றதால் மீண்டும் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இப்படம் வரும் ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு சய்துளளார். நகைச்சுவை நிறைந்த படமாக நாடோடிகள் 2 படம் உருவாகி உள்ளது. முதல் பாகம் சீரியஸாக இருந்த நிலையில் இரண்டாம் பாகம் முற்றிலும் நகைச்சுவை பாணியில் எடுத்துள்ளார்களாம்.

இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடோடிகள் 2 Sneak Peek வெளியாகி உள்ளது.

அந்த காட்சியில் வயதான தாத்தா ஒருவர் சசிக்குமார், மற்றும் அஞ்சலியிடம் காதலிக்க வைப்பதற்காக பேசும் வசனங்கள் அற்புதமாக உள்ளது. இனிமே பாருங்க தோழர்.. பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும் என்று இருவரிடமும் பேசுகிறார். அதை நீங்களே முழுமையாக பாருங்க..

இப்படம் ஜனவரி 31 ரிலீசாகிறது.

Leave a Comment