Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது பேரன் ஐக் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருதுருவங்களும் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தனி ஆளாக புரட்சிகர கருத்துகள் மூலம் மக்களின் கவனம் ஈர்த்தவர் எம்.ஆர்.ராதா. பெரியாரின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டு மூட நம்பிக்கைகளைத் துணிச்சலாகத் தனது சினிமாக்களில் பகடி செய்தவர் அவர். தமிழ் சினிமாவில் பக்திக் காவியங்கள் முழுமையாக ஆக்கிரமித்திருந்த காலத்திலேயே, அதைக் கேள்விக்குள்ளாக்கும் பேரலல் சினிமாக்களை எம்.ஆர்.ராதா எடுத்துக் கொண்டிருந்தார்.

சூளைமேட்டில் பிறந்த மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன், தனது பெயரை எம்.ஆர்.ராதா என சுருக்கிக் கொண்டார். தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்த அவர், சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி நாடகக் கம்பெனியில் இணைந்தார். நாடகங்கள் மூலம் பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சென்ற அவர், சினிமாக்களிலும் நடிக்கத் தொடங்கினார். எம்.ஜி.ஆரைச் சுட்டதால் சிறை தண்டனை பெற்ற எம்.ஆர்.ராதா, சிறைவாசத்துக்குப் பின்னர் தனது நாடகங்களைத் தொகுத்து கதம்பம் என்ற பெயரில் நாடகங்களை வழங்கி வந்தார். இவர் நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் படம் இன்றளவும் சினிமாக் கலை பயிலும் பலருக்கு ரெபரன்ஸாக இருந்து வருகிறது. அதே பெயரில் எடுக்கப்பட்ட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த திரைப்படத்தை எம்.ஆர்.ராதா எடுத்தார். திருச்சியில் தங்கியிருந்த எம்.ஆர்.ராதா. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 1979ம் ஆண்டு உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நாயகன் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது பேரம் ஐக், படமாக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், `அவரைப் பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது. இது அவர்களுக்கானது தான். என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன். பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன்’ என்று தெரிவித்திருக்கிறார். ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவத்தொற படத்தை இயக்கியவர் ஐக் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top