நடிகர் சூர்யா, கே . வி. ஆனந்த் இயக்கத்தில்  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இதனை கிண்டலடித்து இரு தொகுப்பாளினிகள்  தொலைக்காட்சியில் பேசினர்.

nivetha and sangeetha
nivetha and sangeetha

மேலும் அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  இந்த சம்பவம்  சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் சன் நிறுவனத்தின் முன் முற்றுகை இட்டனர்.

suriya fans club

இந்நிலையில் சன் டிவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது,”சமீபத்தில் உங்களது சேனலில் வெளியான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் எங்கள் நடிகர் சங்கத்தின்  மூத்த உறுப்பினர் திரு.சூர்யாவின் உருவ அமைப்பைப் பற்றி கேலி செய்யும் விதமாக (இரு இளம் பெண்கள்) பேசிய தொகுப்பு வெளியானது. தனிப்பட்ட ஒருவரை பற்றி இதைப் போன்ற அநாகரிகமான தேவையற்ற விமர்சனங்கள் வெளியாவது உங்களைப் போன்ற சேனல்களுக்கு பொருத்தமானது அல்ல.

சட்டத்தின்படி,  சராசரி குடிமக்களை போல் ஒரு நடிகருக்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நாகரிகம், அடிப்படை மரியாதையுடன் கூடிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே மேற்கண்ட காட்சியை வெளியிட தங்களது நிறுவனம் அனுமதித்திருக்க கூடாது என கருதுகிறோம்.

#Suriya #SFC #NadigarSangam #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

ஊடகத்துறையில் எங்களது நீண்டகால கூட்டாளி என்னும் வகையில் உங்களது சன் குழும நிகழ்ச்சிகளில் எங்களது பணிகளைப் பற்றிய ஆக்கப்பூர்வமான – அநாகரிகமான எவ்வித விமர்சனங்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது மூத்த உறுப்பினரும், மரியாதைக்குரிய நடிகருமான ஒருவரை காயப்படுத்தும் வகையில், அர்த்தமில்லாத இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடியாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற கசப்பான காட்சிகள் உங்களது குழுமத்திற்கு சொந்தமான சேனல்களில் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அளிப்பீர்கள் என வலியுறுத்துகிறோம்.

நமக்கிடையேயான உறவில் கறைபடியாத வகையில் உடனடியாக, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.”

சன் குழுமம் அல்லது அந்த தொகுப்பாளினிகள் என்ன பதில் சொல்வார்கள் என்று பார்ப்போம் .