Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய திரைவானின் துருவ நட்சத்திரம், நடிப்பின் மறு உருவம், கடைசியில் திடீரென ஒருநாள்!
1952 ஆம் ஆண்டில் தீபாவளி கொண்டாடிய ரசிகர்கள் யாருக்கும் அப்போது தெரியாது – அந்த வருடத்து தீபாவளிக்கு மிகப் பெரிய சிறப்பை சேர்க்க ஒரு நடிகர் வரப் போகிறார் என்று.
அந்த தீபாவளியன்று எல்லா ரசிகர்களையும் தன்னுடைய அபரிமிதமான நடிப்பாற்றலால் திரும்பிப்பார்க்க வைத்தார் அந்த நடிகர்.
ஒரு நடிகனை பொறுத்தவரை முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைவது என்பது மிகப் பெரிய விஷயம். அதில் எத்தனை பேர் முதல் படத்திலேயே தாங்கள் யார் என்பதை நிரூபித்திருக்கிறார்கள், எத்தனை பேர் முதல் படத்திலேயே வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார்கள் என்று கணக்கிட்டுப்பார்த்தால் அப்படிப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் இந்த நடிகருக்கு தான் முதல் இடம்.
இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பெயர் பெற்றவர். இந்த நடிகர் நடித்ததிலேயே உங்களுக்கு பிடித்த படம் எது என்று ரசிகர்களிடம் கேட்டால் குறைந்த பட்சம் நூறு படங்களையாவது நிச்சயம் கூறுவார்கள்.
அப்படி, தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு பெயர்ப்போன அந்த நடிகர், கடைசி காலத்தில், மகளை நினைத்தும், மகனை நினைத்தும், கவலைப்பட்டு, நோயால் அவதிப்பட்டு மரணமடைந்தார்.
என்னை விட சிறந்த நடிகர் அவர் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் பாராட்டப்பட்ட அந்த நடிகர் இந்தியத் திரைவானில் ஒரு துருவ நட்சத்திரம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
