fbpx
Connect with us

நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் திருப்பம்.! தேர்தல் நடைபெறுமா.?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் திருப்பம்.! தேர்தல் நடைபெறுமா.?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற இருக்கிறது என அறிவித்துள்ளார்கள், ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே பல சிக்கல்கள் வந்துள்ளன.

தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்குகிறது, விஷால் தலைமையிலான அணி மீது பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் குற்றம் சாட்டி வந்தார்கள்.

இந்த நிலையில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பாரதிப்பிரியன் உள்ளிட்ட 61 நபர்கள் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார், ஏனென்றால் விதிகளை மீறி பல உறுப்பினர்களை நீக்கியுள்ளார்கள், அதனால் நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் உரிய விளக்கத்தைத் தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இப்படி இந்த புகார் நிலுவையில் இருப்பதால் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top