fbpx
Connect with us

இரண்டு விஷயங்களை முதலமைச்சரிடம் உறுதி செய்த நடிகர் சங்கம்

News | செய்திகள்

இரண்டு விஷயங்களை முதலமைச்சரிடம் உறுதி செய்த நடிகர் சங்கம்

Nadigar Sangam-Flood Relief Fund-CMவெள்ள நிவாரணப் பணிக்காக நிறைய பிரபலங்கள் நடிகர் சங்கத்தில் நிதி கொடுத்திருந்தனர். அதை அனைத்தையும் சேர்த்து 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் வந்துள்ளது.

அந்த பணத்தை நடிகர் சங்கம் சார்பில் இன்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அந்த காசோலையினை வழங்கினார்.

அப்போது அவர்கள் முதலமைச்சரிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்தனர். ஒன்று, தேர்தல் நேரத்தில் நாடக நடிகர்கள் நாடகம் நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பூஜை தொடக்க விழாவிற்கு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் வரவேண்டும் எனவும் கோரிக்கையை வைத்துள்ளனர்.

இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் முதலமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளாராம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top