fbpx
Connect with us

Cinemapettai

முதல்வர் ஜெயலலிதாவையே ஏமாற்றிய நடிகர் சங்கம் – அதிர்ச்சி தகவல்

News | செய்திகள்

முதல்வர் ஜெயலலிதாவையே ஏமாற்றிய நடிகர் சங்கம் – அதிர்ச்சி தகவல்

CM-Jayalalithaa-Meets-with-Nadigar-Sangam-Membersதென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்புகளை ஏற்ற நாசர் தலைமையிலான விஷால் அணி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது, நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு விரைவில் பூஜை போட உள்ளதாகவும், அதற்கு முதல்வர் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் தெரிவித்திருந்தனர். முதல்வரும் பூஜையின் தேதியை தனக்கு தெரிவிக்குமாறும், தான் கண்டிப்பாக அந்த பூஜையில் கலந்துகொள்வதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நல்ல நாள் என்பதால் அவசர அவசரமாக நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் பூஜை போட்டுள்ளனர். இந்த பூஜையில் நாசர், கார்த்தி, விஷால் உள்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூஜை நாள் குறித்து முதல்வருக்கு தகவலே தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிதியை நட்சத்திர கிரிக்கெட் போட்டி, தொலைக்காட்சி தொடர், மற்றும் திரைப்படம் ஆகியவற்றின் மூலம் திரட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டிருப்பதாகவும் இவ்வருட இறுதிக்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top