fbpx
Connect with us

Cinemapettai

பிரபல தொலைக்காட்சியிடம் பெரிய தொகைக்கு விலைபோன நட்சத்திர கிரிக்கெட் !

News | செய்திகள்

பிரபல தொலைக்காட்சியிடம் பெரிய தொகைக்கு விலைபோன நட்சத்திர கிரிக்கெட் !

nadigar-sangam-cricketநடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக “நட்சத்திர கிரிக்கெட் போட்டி” வரும் 17ம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.6 ஓவர்கள் கொண்ட இந்த முன்னணி நடிகர்கள் தலைமையில் எட்டு அணிகள் பங்கேற்கும் போட்டியில், ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் விளையாடுவார்கள்.

தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களின் தலைநகர் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது “ ‘மதுரை காளைஸ்’, ‘சென்னை சிங்கம்ஸ்’, ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘திருச்சி டைகர்ஸ்’, ‘ராமநாடு ரைனோஸ்’, ‘கோவை கிங்ஸ்’ மற்றும் ‘சேலம் சீட்டாஸ்’ என்று 8 அணிகளுக்கு பெயரிட்டிருக்கிறார்கள். இந்த 8 அணிகளுக்கும் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

இப்போட்டியின் மொத்த உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் ரூ. 9 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப், இளையதளபதி விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தெரிகிறது.

விளம்பர தூதர்களாக அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நியமியக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top