Connect with us
Cinemapettai

Cinemapettai

corona-21days-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

90’ஸ் கிட்ஸ் ஃபேவரைட் நடிகைக்கு கொரோனா.. இரண்டாம் டோஸ் போட்டும் இந்த நிலைமையா.?

தமிழ் திரை உலகில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நதியா. இவர் ரஜினி, கமல், பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் தமிழில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் மூலமாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிய தொடங்கியது. இருப்பினும் அனைத்து படங்களையும் ஏற்காமல் தனக்கு பிடித்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய படமொன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தான் நடிகை நதியாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகை நதியா இரண்டு டோஸ் தடுப்பு எடுத்த பின்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

nadhiya-cinemapettai

nadhiya-cinemapettai

நதியாவிற்கு மட்டுமல்லாமல் அவருடன் வசித்து வரும் அவரது அம்மா, அப்பா மற்றும் அவர் வீட்டில் பணிபுரியும் 4 பணியாளர்கள் உட்பட அனைவருக்குமே கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top