fbpx
Connect with us

நாச்சியார் பட நாயகி இவானாவின் உண்மையான வயது தெரியுமா.? என்ன படிக்கிறார் தெரியுமா..?

News | செய்திகள்

நாச்சியார் பட நாயகி இவானாவின் உண்மையான வயது தெரியுமா.? என்ன படிக்கிறார் தெரியுமா..?

பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம் தான் நாச்சியார். இவர் எப்பொழுதும் கொஞ்சம் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

natchiyar

வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது.பிஞ்சு காதல்  திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் புது வரவை வாழ்த்தி வரவேற்போம்.

ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ… ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்… அடடா…

natchiyar

நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு அனைவரும் பிரமித்தார்கள்.

முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது. எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான்.

natchiyar

கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைதனமான குறும்புகளையும், நேரில் காணும்போது கோபத்தை செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும்… அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன்உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது.

natchiyar

 

இப்பொழுது இவானா பற்றி பார்க்கலாம் இவரின் முதல் படத்திலேயே பாலாவின் பட்டறையில் பயிற்சி எடுத்துவிட்டார் ஜி.வி பிரகாஷ் 18 வயது நிரம்பாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஆனால் அவரின் உண்மையான வயது அனைவருக்கும் தெரியும்.

Ivana

ஆனால் இந்த படத்தில் நடித்த மைனர் பெண்ணாக நடித்த இவானாவிற்கு உண்மையில் 17 வயது மட்டும்தான் இவர் தற்பொழுது 12 ஆம் வகுப்பு தான் படித்து வருகிறார்.

இவருக்கு சிறுவயதில் திரைப்படம் நடிப்பதில் அதிகமாக ஆர்வம் இல்லை என்றாலும் முதல் படமே தமிழில் முன்னணி இயக்குனரின் படம் கிடைத்துள்ளது இவானாவுக்கு, இவர் பாலாவின் படம் என்பதால்தான் நடித்ததாக கூறியுள்ளார்.

ivana

இவானா திரைப்படத்தில் நடித்தால் இவருக்கு ஸ்பெஷல் கிளாஸ்லாம் வைத்து 12ஆம் வகுப்பு பாடங்கள் எடுக்கப்பட்டதாகவும் தன்னுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தனக்கு மிகவும் உதவியதாக கொஞ்சும் தமிழில் கூறியுள்ளார் இவானா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top