Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.! பல நாள் ரகசியத்தை உடைத்த கே.எஸ் ரவிகுமார்
நாட்டாமை திரைப்படம் 1994 ல் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது இந்த படத்தில் சரத்குமார் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார் இவருடன் குஷ்பு மீனா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், ரவீந்தர், வைஷ்ணவி, பொன்னம்பலம்,ராணி என ஒரு நட்சதிர பட்டாலமே நடித்திருந்தார்கள்.
இந்த திரைபடத்தை கே.எஸ். ரவிகுமார் இயக்கியிருந்தார் மேலும் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தார்கள், இந்த நிலையில் நாட்டாமை படத்தின் ரகசியத்தை கே.எஸ். ரவிகுமார் மேடையில் கூறியுள்ளார், நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிராஜாவின் ஓம் ஆடியோ வெளியிட்டு விழாவில் உண்மையை கூறியுள்ளார் ஆம் நாட்டாமை படத்தில் விஜயகுமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது பாரதிராஜாவிடம் தானாம் ஆனால் பாரதி ராஜாவோ அடுத்தவங்க படத்தில் நடிப்பது அவ்வளவா சரிப்பட்டு வராது, எனக்கு படத்தின் வேலைகள் இன்னும் இருக்கு என கூறிவிட்டாராம்.
