Videos | வீடியோக்கள்
நாஞ்சில் விஜயனை அம்ம**மாக அடித்து ஓடவிட்ட சூர்யா தேவி.. வைரலாகும் சிசிடிவி வீடியோ
சமீபத்தில் நடிகை வனிதா பிரச்சனையில் தேவையில்லாமல் நாஞ்சில் விஜயன் மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் பங்கு போட்டுக் கொண்டு வனிதாவை அசிங்க அசிங்கமாக பேசி வந்தனர்.
ஆனால் தற்போது நாஞ்சில் விஜயனை சூர்யா தேவியா ஆள் வைத்து கொல்ல முயற்சி செய்ததாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
விஜய் டிவியில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நாஞ்சில் விஜயன். கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.
சமீபகாலமாக இவரை விஜய் டிவியில் பார்க்க முடியவில்லை. திடீரென நடிகை வனிதாவின் மூன்றாவது திருமண பிரச்சனையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அவரை விமர்சித்து வந்தார்.
நாஞ்சில் விஜயன் உடன் சேர்ந்து சூரியா தேவி என்ற பெண்மணியும் வனிதாவை வசை பாடி வந்தனர். தற்போது வனிதா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஹனிமூனில் ஜாலியாக உள்ளார்.
ஆனால் அதற்கு மாறாக தற்போது நாஞ்சில் விஜயனை சூர்யா தேவி ஆள் வைத்து கொலை முயற்சி செய்ததாக அவர் அந்த பேட்டி கொடுத்து வருகிறார். மேலும் ஒரு சிசிடிவி வீடியோ செம வைரலாகி வருகிறது.
