Connect with us
Cinemapettai

Cinemapettai

nvsp-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உண்மை சம்பவம்.. ‘நான் அவளை சந்தித்த போது’ – திரை விமர்சனம்

எல்.ஜி ரவிச்சந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நான் அவளை சந்தித்த போது’.

இன்று திரைக்கு வந்துள்ள நான் அவளை சந்தித்த போது படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதைக்களம் :

சந்தோஷ் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார், கிராமத்து பெண்ணான சாந்தினி தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு சென்னை வருகிறார். அவர் தன்னுடைய உறவினரின் முகவரியை துளைத்து விட்டு வீடு தெரியாமல் தவிக்க அவருக்கு உதவுகிறார் சந்தோஷ்.

ஆனால் இதனை தவறாக புரிந்து கொண்ட ஷாந்தினியின் உறவினர்கள் இவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விடுகின்றனர், ஒரு நாள் இரவு மட்டும் ஷாந்தினியுடன் இருந்து விட்டு தப்பி சென்று விடுகிறார் சந்தோஷ்.

ஆனால் அவரின் மனம் மீண்டும் ஷாந்தினியை நினைக்க அதே ஊருக்கு திரும்பி செல்கிறார்.. அதன் பின்னர் என்ன நடந்தது? இறுதியில் இவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? இயக்குனராகும் சந்தோஷின் கனவு பலித்ததா? என்பது தான் இப்படத்தின் கதை.

இப்படம் இயக்குனர் எல்.ஜி ரவிச்சந்திரனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை பற்றிய சினிமாபேட்டை அலசல் :

சந்தோஷ் பிரதாப், சாந்தினி ஆகியோர் இந்த உண்மை கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை சந்தோஷ் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அவரின் நடிப்பு உணர்வு பூர்வமாக அமைந்துள்ளது.

கிராமத்து பெண்ணாக கிடைத்த வாழ்க்கையை விட்டு விட கூடாது என மிகவும் எதார்த்தமாக நடித்து நம்மை அசர வைக்கிறார் சாந்தினி.

மேலும் இப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் வேலையை அழகாக செய்து முடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

இசை : ஜிதேஷ் முருவேலின் இசை பிரமாதம்.. பாடல்களும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு : ஆர்.எஸ் செல்வா கிராமம், நகரம் என இரண்டிலும் தன்னுடைய அழகான ஒளிப்பதிவால் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

எடிட்டிங் : ராஜா முகம்மது படத்திற்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்து அழகான கோர்வையாக கொடுத்துள்ளார்.

இயக்கம் : எல்.ஜி ரவிச்சந்தர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை படமாக்கி இருப்பதால் ஒவ்வொரு காட்சியையும் உணர்வு பூர்வமாக உருவாக்கியுள்ளார். எமோஷன் காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top