வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

உக்ரைன் நாட்டில் இருந்தே வந்தாச்சு.. நாய் சேகர் படத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பல வெளிநாட்டு ஹீரோயின்களை படக்குழு தேடி வந்தது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பிரபல நடிகை ரியா போஷப்கா இந்த படத்தில் நடிப்பதற்காக தற்போது இந்தியா வந்துள்ளார். பல போராட்டங்களுக்கு பிறகு இந்தியா வந்துள்ள அவர் மீண்டும் திரும்பி தன் நாட்டுக்கு போக முடியாத ஒரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அதாவது உக்ரைன் நாட்டில் தற்போது கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த நாட்டிற்கு விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது இதனால் அந்த உக்ரைன் ஹீரோயின் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை இந்தியாவில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளாராம்.

இதனால் படக்குழுவும் அவர் சம்பந்தப்பட்ட மொத்த காட்சிகளையும் விரைவில் எடுத்து முடித்து விட வேண்டும் என்ற வேலையில் மும்முரமாக இருக்கின்றார்கள். இது இப்படி இருக்க வடிவேலுவின் நடிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் கிடைத்தபாடில்லை.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தில் வடிவேலு மிகப்பெரிய பணக்காரர் ஆக நடிக்கிறார். இதனால் படக்குழு அவருக்கு ஜோடியாக நடிக்க ஒரு வெளிநாட்டு ஹீரோயினை தேடி வந்தது.

படப்பிடிப்பு ஆரம்பித்து பல நாட்கள் கடந்த பின்னும் இன்னும் ஹீரோயினை தேடுவதிலேயே தயாரிப்பு நிர்வாகம் பிஸியாக இருக்கிறது. ஆனால் ஹீரோயின் தான் இன்னும் செட் ஆகாமல் இருக்கிறார். உக்ரைன் நாட்டில் இருந்தே ஹீரோயின் வந்தாச்சு இன்னும் வடிவேலு படத்துக்கு ஹீரோயின் கிடைக்கவில்லையா என்று தற்போது திரையுலகில் பேச்சாக கிடக்கிறது.

Trending News