fbpx
Connect with us

Cinemapettai

‘நாச்சியார்’ திரைவிமர்சனம்

nachiyar

Reviews | விமர்சனங்கள்

‘நாச்சியார்’ திரைவிமர்சனம்

நடிகர்கள்: ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா, தமிழ் குமரன், ராக்லைன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு: ஈஸ்வர் இசை: இளையராஜா தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ் & இயான் ஸ்டுடியோஸ் இயக்கம்: பாலா.

nachiyar

nachiyar

படத்தின் கரு:

பாலா படம் என்றாலே யதார்த்தங்கள், கோவம், வன்முறை என்று அனைத்தும் இருக்கும். அதேபோல் ‘நாச்சியார்’ படத்திலும் விட்டு வைக்கவில்லை பாலா. இவர் இயக்கிய படங்களில் குறுகியகாலத்தில் வெளியான படம் இதுவாகதான் இருக்கும்.

இந்த படத்தில் உதவி ஆணையராக  ஜோதிகாவும் ராக்லைன் வெங்கடேஷும் இதில் நடித்துள்ளனர். படத்தின் முதல் கட்சியிலே இவானா அறிமுகம் ஆகிறார். கர்பணி பெண்ணாக இவானா இரயில்வே நிலையத்தில் நின்றுகொண்டு இருக்க, இதை பார்த்த ஒரு கும்பல் வற்புறுத்தி இழுத்து செல்லா, அதை பார்த்த ஜோதிகா அந்த பெண்ணை காப்பாற்றி விசாரணை செய்கின்றார்.

விசாரணையில் கர்ப்பத்திற்கு காரணம் ஜிவி தான் என்று கூற உடனே ஜீ.வியை   கைதுசெய்து விசாரணை செய்தது போலீஸ். பிறகு அது ஜி.வி.பிரகாஷ் குழந்தை இல்லை என்று தெரியவருது.

இந்த பெண்ணை யார் ஏமாற்றினார்கள் என்பதை கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.

‘இவானா’ இவரின் நடிப்பு புதுமுக நடிகையாக இல்லாமல் சினிமாவில் பழக்கப்பட்ட நடிகை போல கதைக்கு ஏற்ப கச்சிதமாக நடித்துள்ளார். ஜோதிகா கதாபாத்திரத்தை அழுத்தமாகவும், அதேபோல் ஜோதிகா விசாரிக்கும் காட்சி ரியல் ஆக இருக்கும். ஜோதிகா விசாரிக்கும் விதம் மிரட்டும் கட்சிகளாக அமைந்துள்ளது.

ஜி.வி பிரகாஷ் சென்னை லோக்கல் இளைஞனை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வருகின்றார். ஜி.வியின் யதார்த்தமாக நடிப்பை வெளிபடுத்தியுள்ளார், ‘நாச்சியார்’ மூலம் அடுத்து அடுத்து நிறைய வாய்ப்புகள் ஜி.வி பிரகாஷ்க்கு வரும்.

மேலும் இந்த படத்தில் ஜோதிகாவுக்குத் தான்  ரியல் ஹீரோவாக தெரிவது போல் அழுத்தமான கதாபாத்திரத்தை கொண்டுயுள்ளார். இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. ‘நாச்சியார்’ படத்தில் ராஜாவின் ராஜாங்கம் காட்டியுள்ளார். ஈஸ்வரின் ஒளிப்பதிவு சிறப்பாக செய்துள்ளார்.

‘நாச்சியார்’ பாலா படத்தில் இருந்து சற்று மாறுப்பட்டு இருந்தாலும் பாலா படத்தின் சாயல் இருக்கு. இந்த படத்தின் முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும்கூட அடுத்த பாதியில் விறுவிறுப்பு நிறைந்து இருக்கும். இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘நாச்சியார்’ பாலாவின் படமாக இல்லாமல் சிறிது மாறுப்பட்டு, அடுத்தாக கமர்ஷியலில் அடியடுத்து வைக்க இது ஒரு அடித்தளமாய் அமையும்.

Cinemapettai Ratting:5/3.5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top