பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். இவர் எடுக்கும் படங்கள் கொஞ்சம் வன்முறை கலந்ததாக இருக்கும் தற்பொழுது வன்முறைகளுடன் சேர்த்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய விதம். மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது.

natchiyar

ரசிகர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாறி மாறி ஒரு நல்ல திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவை மீண்டும் வாழ்த்தி வரவேற்போம். ஜி.வி பிரகாஷ் மிக அருமையாக நடித்துள்ளார்.

natchiyar

அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ தெரியவில்லை? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும் அடடா அற்புதம். நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவும் மிக அருமை.

இந்த படத்தின் சென்னை மொத்த வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது இந்த படத்தின் மூன்று நாட்கள் முடிவில் 1.03 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் இந்த படத்தில் எந்த முன்னணி நடிகரும் நடிக்காமல் கோடி ரூபாய் வசூல் செய்தது மிக பெரிய விஷயம் தான்.

natchiyar

அதனால் பாலாவின் கிரேஸ் எதுவும் இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறது என ரசிகர்கள் கூருகிறார்கள் அதுமட்டும் இல்லாமல் இன்னும் திரையில் நல்ல புக்கிங் இருப்பதாக கூறுகிறார்கள்.