திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

அடுத்து உருவாகும் வடசென்னை.. படம் வெளியாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் செய்த சாதனை

தமிழ் சினிமாவில் சமீப காலமாக குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படங்களை இயக்கி வருகின்றனர். ஒரு சில இயக்குனர்கள் அவர்கள் வாழும் கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கதையை வைத்து படத்தை இயக்கி வெற்றியும் கண்டுள்ளார்கள்.

அப்படி சமீபகாலமாக வடசென்னையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தொடர்ந்து படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே வடசென்னை என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது.

தற்போது அதே பாணியில் லோகேஷ் குமார் என்ற இயக்குனர் வடசென்னை நடக்கும் சம்பவங்களை கொண்டு N4 என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படமும் வட சென்னையில் நடக்கும் சம்பவங்கள்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

n4
n4

இப்படம் Calcutta International Cult Film Festival திரைப்பட விழாவில் பங்கேற்று.சிறந்த இயக்குனருக்கான விருதை அள்ளிச் சென்றது. மேலும் 11ஆவது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2021ல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெற்றுள்ளது.

ஒரு சிலர் ஏன் சென்னையில் நடக்கும் சம்பவங்களை மட்டும் வைத்து படங்களை ஏன் அதிகம் இயக்குனர்கள் எடுக்கிறார்கள் என கேட்டனர். அதற்கு காரணம் சென்னையை வைத்து படத்தை எடுக்கும் போது சென்னையிலுள்ள பாக்ஸ் ஆபீஸில் எப்படியும் அதிகமான ரசிகர்கள் பார்க்கப்பட்டு முதல் நாள் அதில் வசூல் எடுத்துவிடலாம் என்பதற்காகத்தான் எடுக்கிறார்கள் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Trending News