fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சி எஸ் கே டீம்மில் தோனி எதுவரை ஆடுவார்- தகவலை வெளியிட்ட ஸ்ரீனிவாசன்

Sports | விளையாட்டு

சி எஸ் கே டீம்மில் தோனி எதுவரை ஆடுவார்- தகவலை வெளியிட்ட ஸ்ரீனிவாசன்

சமீபத்தில் தோனியின் பெயர் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது நாம் அறிந்ததே. சிலர் அரசியல் காரணங்கள் என்றனர், வேறு சிலரோ தோனி ரிட்டையர் ஆக முடிவு செய்துவிட்டார் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் தோனி சில மாதங்களுக்கு முன்பே மாதுளையில் ஐபில் ஆடுவேன், பின்னர் முடிவை அறிவிப்பேன் என்றார். இந்தியாவின் கோச்சான ரவி சாஸ்திரி கூட ஐபில் இல் நன்றாக ஆடினால், தானாக டீமுக்கு வர வாய்ப்பு என கூறினார்.

இந்நிலையில் தோனி எதுவரை ஆடுவார் என்பது நமக்கு தெரியாது. ஆனால் தோனியின் ஐபில் கேரியர் பற்றிய கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்சியில் தோனி பற்றி பிணவருமாறு பேசியுள்ளார் ஸ்ரீனிவாசன் ..

“மக்கள் நிறைய பேசலாம் அவர் எப்பொழுது ஒய்வு, எதுவரை ஆடுவர் .. என்றெல்லாம். அவர் ஆடுவார் இந்த ஐபில். நான் அதற்கு உத்தரவாதம் கொடுப்பேன். மேலும் அடுத்த வருடம் (2021) ஏலத்துக்கு முன் அவரை நாங்கள் தக்க வைப்போம். எனவே யாருக்கும் எந்த குழப்பமும் வேண்டாம்.” என சொல்லியுள்ளார்.

தல தோனி ரசிகர்கள் விசில் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top