Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்காக உருவாக்கப்பட்ட கதை தான் சைக்கோ ! மிஷ்கின் என்னை ஏமாற்றி விட்டார் – வீடியோ பதிவிட்ட மைத்ரேயா !
சைக்கோ
உதயநிதியை ஹீரோவாக்கி மிஸ்க்கின் இயக்கும் படம். டைட்டில் லுக் போஸ்டர், ஷூட்டிங் ஸ்பாட் போட்டாக்கள் வெளியாகி நல்ல ரீச் ஆனது. இந்நிலையில் இப்படத்தினை சுற்றி புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.

myskin udhay
மைத்ரேயா
விடியோவின் ஆரம்பத்தில் சினிமாவுக்காக இப்பெயரை தனக்கு வைத்ததே இயக்குனர் தான் என்கிறார். மேலும் 2015 இல் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்றும், அட்வான்சும் தந்தோம் என்கிறார். மேலும் வேண்டுகோளுக்கு இணங்க சவரகத்தி, துப்பறிவாளன் போன்ற படங்களை முடிக்கவும் நேரம் கொடுத்தோம்.
இடைப்பட்ட காலத்தில் அந்த கதாபாத்திரத்துக்காக தண்னை தானே ரெடி செய்ததாகவும், இந்நிலையில் இவருக்கு சொன்ன கதையா தான் தற்பொழுது இயக்குனர் வேறு ஹீரோவை வைத்து எடுக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நீதிமன்ற செல்ல முடியும் எனினும் இந்த நமபிக்கை துரோகத்துக்கு மிஸ்க்கினின் மனசாட்சி தான் நல்ல பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
சினிமாபேட்டை கிசு கிசு
பொதுவாக கதை என்னுடையது என்று சொல்லும் பிரச்சனை நாம் பார்த்துள்ளோம், ஆனால் இது எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்பது சற்றே ஆச்சிரியமாக உள்ளது. ஒப்பந்தம் செய்யும் பொழுது அதில் சத்தியமாக யாரும் கதை எழுதப்பபோவதில்லை என்பது நாம் அறிந்ததே.
கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி கேட்கிறாரா அல்லது எனக்கான கதை என்னை வைத்தே படம் எடுங்கள் என்கிறாரா அல்லது புதிய கதை ரெடி பண்ணுங்க என்கிறாரா ? என்பதே தற்பொழுதைய குழப்பம்.
மிஸ்க்கின் அல்லது உதயநிதி ஸ்டாலினின் தரப்பு பொதுமேடையில் பதில் சொல்லுமா, அல்லது தனியாக சிந்திப்பார்களா . பொறுத்திருந்து பார்ப்போம்.
