உயிர் பயத்தை காட்டும் மர்மவில்லா.. ஜீவாவின் பிளாக் ட்ரெய்லர் மிரட்டியதா.?

Black Trailer: பெரிய தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் கூட ஜீவா இன்னும் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் தான் இருக்கிறார். ஆரம்பத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்கவில்லை.

அவர் நடித்த சில படங்களும் வந்த சுவடு தெரியாமல் போனது. அதை தொடர்ந்து இவரும் திகில் படம் மூலம் கம்பாக் கொடுக்க தயாராகிவிட்டார். அதன்படி கே.ஜி பலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பிளாக் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

சாம் CS இசையமைத்துள்ள இப்படம் மர்மம் கலந்த ஒரு சயின்ஸ் பிக்சன் கதையாக உருவாகி இருக்கிறது. அது ட்ரெய்லரிலேயே வெளிப்படையாக தெரிகிறது. அதன்படி கணவன் மனைவியாக இருக்கும் ஜீவா பிரியா பவானி சங்கர் இருவரும் விடுமுறையை கழிப்பதற்காக ஒரு வில்லாவிற்கு செல்கின்றனர்.

மர்ம வில்லாவில் சிக்கும் ஜீவா

புதிதாக கட்டப்பட்டிருக்கும் அந்த விழாவில் முதல் கஸ்டமராக நுழையும் இவர்களுக்கு பல மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. பெரும் ஆபத்தில் இருக்கும் இவர்களால் எந்த உதவியும் பெற முடியவில்லை.

எப்படியும் அங்கிருந்து தப்பித்து விட போராடும் ஜீவா, திடீரென காணாமல் போகும் பிரியா பவானி சங்கர் என ட்ரெய்லர் விறுவிறுப்பாக நகர்கிறது. இறுதியில் சந்தேக வளையத்திற்குள் வரும் ஜீவா எப்படி தப்பிக்க போகிறார் என்ற ட்விஸ்ட்டோடு முடிகிறது.

சமீப காலங்களாக திகில் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதேபோல் கடந்த மாதம் வெளிவந்த டிமான்டி காலனி 2 படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த பிளாக் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திகில் கதை மூலம் கம்பேக் கொடுப்பாரா ஜீவா.?

- Advertisement -spot_img

Trending News