malti-chahar

11 வது சீசன் ஐபில் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றது. இந்த சீசனில் பல அணிகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தேறியது. இரண்டு வருட தடை முடிந்து கம் பேக் கொடுத்துள்ளது சென்னை அணி. விட்ட இடத்தில் இருந்து துவங்குவது போல, நன்றாகவே விளையாடி வருகின்றது இந்த அணி. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் பிலே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

மைதானத்தில் தோணி தலைமயில் சென்னை அணி ருத்ரதாண்டவம் ஆடுகிறதென்றால், காலரியில் இவர் மனைவி தலைமையில் இந்த அணிக்கு முழு சப்போர்ட் தருகிறது மகளிர் ஆர்மி. இதில் ரெய்னா, ஹர்பஜன், தாஹிர், வாட்சன் போன்றோரின் துணைவியாரும், மற்ற வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர்.

Priyanka Raina – Sakshi Dhoni

அதில் பலர் உள்ள பொழுதும் இந்த ஒருவர் மற்றும் நம் நெட்டிசன்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர். பலரும் இவர் யார் என்று சமூகவலைத்தளங்களில் விவாதம் செய்யவும் ஆரம்பித்தனர்.

Malti-Chahar

மாலதி சாஹர்

சென்னை போட்டிகளில் மிகவும் த்ரில் ஆக மேட்ச் பார்க்கும் இவர் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் சகோதரி ஆவார். எனினும் இந்த போட்டிகளுக்கு முன்பே பிரபலமான செலிபிரிட்டி தான். கடந்த 2014 இல் நடந்த மிஸ். இந்தியா போட்டியில் கலந்து கொண்டவர். அதில் மிஸ் சுடோக்கு பட்டம் வென்றவர். தற்பொழுது நடிகை மற்றும் விளம்பர பட மாடல்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

தீபக் மற்றும் மாலதிக்கு மற்றோரு சகோதரனும் உண்டு. அவரும் கிரிக்கெட் வீரர் தான். ராகுல் சாஹர். லெக் ஸ்பின் வீசும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார். எனினும் இந்த சீசன் இது வரை எந்த போட்டியிலும் ஆடவில்லை.

அதிகம் படித்தவை:  Twenty20 Cricket World Cup 2016 Memes
Malti-chahar-with-Mahendra-Singh-Dhoni

சென்னை அணிக்கு இவர் ஆதரவு அளிப்பது தன் சகோதரன் அணியில் விளையாடுவதாலா ? அல்லது சென்னை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விரைவில் கோலிவுட்டில் நுழைவது இவர் நோக்கமா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.