சைதை துரைசாமிக்கு சொந்தமான ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த இளம்பெண், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை முன்னாள் மேயரும், அதிமுக பிரமுகருமான சைதை துரைசாமிக்கு சொந்தமான இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம், சென்னை தி.நகரில் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வியாழன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி,நேற்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் உடல், அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  மெட்ரோ பணியில் கலவை வெளியேறியதால் வண்ணாரப்பேட்டையில் பீதி!

ஆனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் உறவினர்கள், சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஐ.ஏ.எஸ் மையத்தின் ஆசிரியர்கள் கொடுத்த அதிக அழுத்தம் காரணமாக , மன உளைச்சலுக்கு ஆளானதால் அந்த பெண் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் உரிமையாளரான சைதை துரைசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.