என் படத்தில் விஜய் நடித்தால் இந்த கதாபாத்திரம் தான்.. ஹாலிவுட் நடிகருடன் ஒப்பிட்ட மிஸ்கின் 

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்குவார்கள். அப்படி வித்தியாசமான கதைக்களம் விசித்திரமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் மிஸ்கின்.

சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மிஸ்கின் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பு பெற்றார். அதன் பிறகு மிஷ்கின் இயக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது.

சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். அப்படி மிஸ்கின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.

vijay-66-movie
vijay-66-movie

அதற்கு விஜய் ரசிகர் ஒருவர் நீங்கள் பல படங்களை இயக்கி உள்ளீர்கள் விஜயை வைத்து நீங்கள் படங்கள் இயக்குவதாக இருந்தால் எந்த மாதிரியான கதாபாத்திரம் அவருக்கு கொடுப்பீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த மிஸ்கின் விஜயின் நடிப்பும் திறமையும் தன்னை அசர வைத்துள்ளது. அதனால் அவருக்கு என் படத்தில் ஜேம்ஸ்பாண்ட் போல் காட்சிகள் வைப்பேன் என கூறியுள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் மிஷ்கின் மற்றும் விஜயின் கூட்டணி மிக விரைவில்  பணியாற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும் விஜயின் மிஷ்கினும் இணைந்து பணியாற்றினால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்