மிஷ்கின் படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அவருடைய படத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் மிஷ்கின் அவர்களுக்கு கமல்ஹாசன், விக்ரம் இருவரையும் இயக்க ஆசையாம்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர், கமல்ஹாசனுடன் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பு கிடைத்து, கடைசியில் சில பிரச்சனையால் அது கைவிடப்பட்டது.

நடிகர் விக்ரமையும் இயக்க ஆசை இருக்கிறது. நான் இருவரையும் ஒரே மாதிரி தான் பார்ப்பேன். விக்ரம் சிறிது படங்களே நடித்திருந்தாலும் பெரிய நடிகர் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறார். சேது, பிதாமகன் போன்ற படங்கள் இன்றும் பேசப்படுகிறது என்றார்.