மோசமாக நடந்து கொள்ளும் மிஷ்கின், ஹரி.. இவங்கள பார்த்து கத்துக்கோங்க

சமீபகாலமாக சினிமா துறையில் இருந்து பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. பெரிய நடிகர்கள் தங்களது தயாரிப்பாளர், இயக்குனர் என யாரையும் மதிப்பதில்லை. ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்கள் தங்கள் படங்களின் தயாரிப்பாளருக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள்.

இவ்வாறு இருக்கையில் தற்போது உள்ள இயக்குனர்கள் மேடையில் பேசும்போது அநாகரீகமான வார்த்தைகள் பயன்படுத்துகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இயக்குனர் மிஸ்கின் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என அனைவரையும் விட்டு வைக்காமல் தரக்குறைவாக பேசியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இப்படத்தின் இயக்குனர் ஹரி செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

அப்போது ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோ நடிப்பதைப் பற்றி உணர்ச்சி வசமாக பேசியபோது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினார். இதைக்கேட்ட செய்தியாளர்கள் மற்றும் யானை படக்குழு அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ஒரு பொது மேடையில் இயக்குனர்கள் தன்னை மீறி கெட்ட வார்த்தை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் 1,000 கோடி வசூல் தரும் பான் இந்தியா படங்களை எடுத்திருந்தாலும் பிரெஸ் மீட்டில் தலைக்கனம் இன்றி சில இயக்குனர்கள் நாகரீகமாக பேசுகிறார்கள். பாகுபலி ராஜமௌலி, கேஜிஎப் பிரசாந்த் நீல், கன்னட நடிகர் யாஷ் போன்றவர்கள் பொது மேடைகளில் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கின்றனர்.

மிஸ்கின், ஹரி போன்றவர்கள் மீடியா முன்பு இவ்வாறு அருவருப்பாக பேசுவது கண்டனத்துக்கு உரியது என ஊடகத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களது இந்த செயல் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.

Next Story

- Advertisement -