Connect with us
Cinemapettai

Cinemapettai

myskkin-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷாலை ஒதுக்கிய பிறகு மிஷ்கினுக்கு கோடிகளுடன் கொட்டும் பட வாய்ப்புகள்.. அடுத்த படம் யாருடன் தெரியுமா?

எந்த நேரத்தில் விஷால், மிஷ்கினுக்கு படவாய்ப்பு தராதீர்கள் எனது கூறினாரோ தெரியவில்லை. அன்றிலிருந்து மிஷ்கினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஒரே நேரத்தில் நான்கு படங்களை ஓகே செய்துள்ளார் மிஸ்கின்.

லாக்டோன் முடிந்தபிறகு அருண் விஜய்யை வைத்து ஒரு போலீஸ் கதையை உருவாக்க உள்ளார். இந்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து கிட்டத்தட்ட நான்கு கோடிகள் சம்பளம் பேசி உள்ளார் மிஸ்கின்.

அதே நேரத்தில் சிம்புவுடன் அடுத்த வருடம் செய்யப்போகும் படத்துக்கு 8 கோடி சம்பளம் எனவும், அதற்கான கதையை ஏற்கனவே முடித்து வைத்து விட்டார்.

அதற்கு இடையில் கதாநாயகியை மையப்படுத்தி ஒரு பேய் கதையை உருவாக்கி வைத்துள்ளதாகவும், அதற்கு இரண்டு கோடி சம்பளமும் நாயகியையும் தேர்வு செய்து விட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக அருண் விஜய் படத்தை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம் மிஸ்கின். இந்த படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு கோடிகள் வரை சம்பளம் கேட்டுள்ளாராம்.

விஷாலை விட்டு பிரிந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும் என்பதை மிஸ்கின் கண்கூட காட்டி விட்டார் போல. தற்போது விஷாலுடன் இருக்கும் அனைவரும் மெல்ல மெல்ல விலக தொடங்கியுள்ளனர்.

Continue Reading
To Top