Connect with us
Cinemapettai

Cinemapettai

myskkin-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள ஆசைப்படும் மிஸ்கின்.. இந்த நேரத்தில் இந்த ரிஸ்க் தேவையா?

வித்தியாசமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் மிஷ்கின். மிஷ்கின் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் அனைத்துமே எதார்த்தமான திரைக்கதையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

சமீபகாலமாக மிஷ்கின் இயக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் அடுத்தடுத்து அவரது படங்களில் பெரிய நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

மிஸ்கின் அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து ஒரு படமும், சிம்புவை வைத்து ஒரு படமும், கதாநாயகியை மையப்படுத்தி ஒரு படமும் எடுக்க உள்ளார். ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட 2 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இந்த நேரத்தில் தயாரிப்பு என்ற பெயரில் தன் கையைத் தானே சுட்டுக் கொள்ள முடிவெடுத்து விட்டார் மிஸ்கின். மிஸ்கின் தம்பி ஆதித்யா என்பவர் இயக்கவுள்ள அடுத்த படத்தை தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தில் மெட்ராஸ் கலையரசன், ரமேஷ் திலக், அனுகீர்த்தி வாஸ், ராதாரவி போன்றோர் நடிக்க உள்ளனர். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் பூஜை எளிமையாக நடந்து முடிந்தது.

இயக்குனர் ராம், மிஸ்கின் இணைந்து நடித்த சவரக்கத்தி எனும் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இந்த படத்தை OTT தளத்தில் விற்பதற்காகவே இந்த படத்தை எடுப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Continue Reading
To Top