Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போட்டோவுடன் பிசாசு 2 அப்டேட்டை தட்டி விட்ட மிஷ்கின்- அசுர பாய்ச்சலை ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர்கள்

சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் மிஷ்கின். இயக்கம் மட்டுமன்றி சில நாட்களாக நடிப்பிலும் கலக்கி வருகிறார். இதோடு அல்லாமல் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துவிட்டார். மிஷ்கின் தனது தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிதா’ படத்தை தயாரித்து வருகிறார். விஷாலுடன் துப்பறிவாளன் 2 படத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக  ஆண்ட்ரியாவுடன் பிசாசு 2, சிம்பு ப்ரொஜெக்ட் என உள்ளது இவரது சினிமா லைன் அப்.

ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா உடன் சைக்கோ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.

tweet

இப்படத்தின் இசை அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டது என போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் இயக்குனர்.

tweet

சிறிய இடைவெளிக்கு பிறகு வரும் அவருக்கு நல்ல இரண்டாவது இன்னிங்ஸ் அமைய வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள். எப்படியாவது கார்த்திக் ராஜாவின் பெருமையை புரிய வைத்து விடுங்கள் எனவும் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
To Top