Connect with us

Cinemapettai

மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா ?

Cinema News | சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா ?

மிஷ்கின் படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அந்தளவுக்கு கதைக்களத்தை தேர்ந்தெடுப்பார். இந்நிலையில் விஷாலின் துப்பறிவாளன் தான் இவர் கடைசியாக இயக்கிய படம். ஜனரஞ்சக வெற்றி பெற்றது இப்படம்.

mysskin-vishal-new-film-thupparivalan

mysskin-vishal

நடிகர்

பின்னர் தானே கதை எழுதி, தயாரித்து , வில்லனாக சவர்க்கத்தி படத்தில் நடித்தார். நடிகராக தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ராம்பிரகாஷ் ராயப்பாவின் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என இரு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

savarkatthi myskkin

இந்நிலையில், மிஷ்கின் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தி ஹீரோவாக சாந்தனு பாக்கியராஜ் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

shanthanu myskkin pc sreeram

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள், பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top