fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சைக்கோ பட வில்லன் ஏற்கனவே கௌதம் மேனன் படத்தில் நடித்துள்ளார்.. அதுவும் யாரு கூட பாருங்க

gowtham-rajkumar-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சைக்கோ பட வில்லன் ஏற்கனவே கௌதம் மேனன் படத்தில் நடித்துள்ளார்.. அதுவும் யாரு கூட பாருங்க

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் பலரும் தட்டுத் தடுமாறித் தான் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். அந்தவகையில் தற்போது ஹீரோவாகவும் நடிகராகவும் கலக்கி வரும் பலரும் இதற்கு முன்பே பல படங்களில் நமக்கு தெரியாமலேயே நடித்திருப்பார்கள்.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் பிரபலமாவதற்கு முன்பு பல படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி என்பவர் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய படத்தில் நடித்து உள்ளார் என்ற செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வருட இறுதியில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான படம் சைக்கோ. விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார் ராஜ்குமார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் இவர் 2012 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஜீவாவுக்கும் சந்தானத்திற்கும் நண்பராக நடித்துள்ள காட்சிகள் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

psycho-rajkumar

psycho-rajkumar

ஜீவா சந்தானம் ஆகியோரின் கல்லூரி வாழ்க்கை காட்சிகளில் இருவருடனும் சேர்ந்து நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top